சங்கீத உலகத்தின் ஆங்கில மோகம்

ஒவ்வொரு முறை ராகா, ரசிகாஸ் போன்ற ஈறு கெட்ட வார்த்தைகளை கேட்கும்போது அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. தமிழ் வார்த்தைகளை உபயோகிப்பதற்கு வெட்கமா/தயக்கமா, இல்லை வார்த்தை முடிவை விட்டு விட்டால் அவை ஆங்கிலம் ஆகிவிடும் என்ற கனவா?

ராகா, ரசிகா – எனக்குத் தெரிந்து எந்த மொழியிலும் இல்லை(ராகா மட்டும் கன்னடத்தில் உண்டு. ஆனால் நம்மவர்களுக்கு கன்னடர்களின் மீது அவ்வளவு கரிசனமா?)

ராகம் என்று சொல்லுங்கய்யா. ரசிகாஸ் என்று கொலை செய்வதற்கு பதில் அதே அர்த்தத்திற்கு ஆங்கிலத்தில் எண்ணற்ற வார்த்தைகள் இருக்கின்றன.