Magical Realism in Raghuvamsam
மரங்கள், செடிகள் காய்க்காமல், பூக்காமல் இருந்தால், கிராமப்புறங்களில் சில சடங்குகளைச் செய்வார்களாம், அப்போது அவை உடனடியாகப் பூத்துவிடுமாம். இதைத்தான் ‘தோஹதம்’ என்கிறார்கள்.
உதாரணமாக, அசோக மரம் அல்லது மகிழ மரம் பூக்கவேண்டுமென்றால், பெண்கள் அதனைக் காலால் உதைப்பார்கள், இன்னும் சில மரங்களை விளக்குமாறால் அடிப்பார்கள், பிரியங்குக் கொடியை தினமும் பெண்கள் தொட்டு அதைக் கனிவாகப் பார்ப்பதால் அது பூக்கும், மந்தாரக்கொடியைப் பூக்கச்செய்ய அதனருகே சென்று அதைக் கடுமையாகத் திட்டவேண்டும்.
இப்படிதான், இந்துமதி ஒரு அசோக மரத்தை தோஹதம் செய்ய நினைத்தாளாம், அதற்காக, அந்த மரத்தின் பக்கத்தில் சென்று காலால் உதைத்தாளாம். ஆனால், அசோக மரம் இந்துமதி தன்னை வாழ்த்துவதாக நினைத்துக் கொண்டுவிட்டதாம்
- ராமனின் தாத்தா :: என். சொக்கன்
படித்தால் மாந்திரீக எதார்த்தம் மாதிரி இருக்கிறது.
மரங்கள் என்பது நெடிந்து உயர்ந்த ஊடகங்களையும் செடிகள் சிற்றிதழ்களையும் குறிக்கலாம்.
மனிதர்கள் காய்ந்த பழமாக முதிர்ச்சி அடையாமல் இருந்தால் காலால் உதைப்பது போல் அவதூறு கட்டுரை எழுதி நிலைக்குக் கொணருவது, விளக்குமாற்றுப் பார்வை, கல்லூரி பயிற்சி என்னும் கனிவான பார்வை, சாம, தான, பேத, தண்ட முறையில் தடியாலடித்துப் பழுக்க வைக்கிறார்கள்.
சிலர் திட்டினால் கூட ‘மோதிரக் கையால் குட்டு’ என்று மகிழ்ந்து விடுகிறார்கள் மக்கள்.