பொய்களை பற்றிய புனைவுகள்.
ரவி ஶ்ரீனிவாஸ் `அ.மார்க்ஸின் பொய்கள்’ என்று ஒரு நீண்ட விளக்கப்பதிவு; அதற்கு ̀ஆஹா! என்ன அழகாய் எக்ஸ்போஸ் செய்திருக்கிறீர்கள்’ என்று பின்னூட்டங்கள். இனி எதையும் படித்து வாசககர்கள் உண்மையை தெளிய வேண்டும் என்கிறார் ரவி; சரி நாமும் தெளிவோம். http://ravisrinivas.blogspot.com/2008/11/blog-post_12.html
அ.மார்க்ஸின் எழுத்து, அரசியல் நேர்மை கொண்ட அளவிற்கு அறிவு நேர்மை கொண்டதில்லை என்றுதான் இப்போதெல்லாம் நானும் கூட நினைக்கிறேன். ஆகையால் அவர் எழுத்தை விமர்சிப்பதும், பிரச்சனைகளை எடுத்துப்போடுவதும் எனக்கும் ஒப்புதலே. ஆனால் ̀அ. மார்க்ஸ் பொய் சொல்கிறார், அருந்ததி பொய் சொல்கிறார், இன்னும் எல்லோரும் பொய் சொல்கிறார்கள்’ என்று நீண்ண்..ட பதிவில் சுட்டி காட்டும் பொய்கள் என்ன? ̀நிலம் உண்மையில் குத்தகைக்கு தரப்படுகிறது, தற்காலிக குடியிருப்புகளையே அதில் எழுப்ப முடியும், நிரந்தர கட்டிடங்கள் எழுப்ப அனுமதி இல்லை, ” என்கிற ஒரு விஷயத்தை சொல்லாமல் மறைத்ததாம்(நான் அ.மா. கட்டுரையை படிக்கவில்லை, ரவி சொல்வதை வைத்து). இந்த வகை நேர்மையின்மை எல்லாருடைய எழுத்திலும் பார்க்கலாம், ரவியுடமும் உண்டு; ஜேமோ எழுத்து முழுக்க முழுக்க இதுதான்; நீலகண்டன் போன்றவர்களின் ஒவ்வொரு வரியிலும் பார்க்கலாம். இந்த ஒத்தை பாயிண்டை வைத்து 200 வரிகளுக்கு மேல் ஒரு பதிவு. 200 வரிகளில் ஜல்லியடித்ததற்கு 5 ட்விட்களில் 5 பொய்களை அடுக்கியிருக்கலாம். எழுத நேரமே இல்லாத இந்த வெத்து அறிவு ஜீவி, வெத்து வார்த்தைகளை 200 வரிகளில் செலவிட்டதை உருப்படியாக 4 வரிகளில் எழுதியிருக்கலாம். விஷயம் இருந்தால்தானே செய்வது. மேலும் அப்படி அறிவு பூர்வமாய் எழுதிவிட்டால் எப்படி ரவி ஶ்ரீனிவாசாக இருக்க முடியும்!