ட்விட்டர் எழுத …
ட்விட்டரில் எழுதுவது பழகிவிட்ட ஒன்றாகவும், 140 என்பது சவாலாகவும் உள்ளது. சோதனைக்காக எனது கடைசி தொடர் ட்விட்களை இங்கே ஒன்றாக தருகிறேன்.
சுகுணா திவாகர் கவுண்டமணி பற்றி எழுதிய பதிவை வாய்ப்பாக்கி சில கருத்துக்களை ட்விட்டரில் சொல்லியிருந்தாலும், துவங்கும் போது சுகுணாவுடன் ̀முழுவதும் உடன்படவில்லை’ என்று டிஸ்கி குடுப்பது அகந்தையோவென நினைத்து செய்யவில்லை. பிறகு பலர் என் கருத்தை சுகுணாவின் பார்வையோடு கலந்து கட்டி, கம்பு சுத்தி, நெற்றி என நினைத்து கண்ட இடத்திலும் பொட்டு வைத்த போதும் அலட்டவில்லை. ஆனால் இப்போது சுகுணாவின் 3வது பதிவை படித்து எனக்கே தாங்கவில்லை; கவுண்டரை பற்றி மேலும் எழுதுவது (எனக்கே) காமெடியாகிவிடுமோ என்று அஞ்சுகிறேன். கவுண்டரை பற்றி மீண்டும் எழுதும் முன் சுகுணாவின் மிகை வாசிப்புகளை அவிழ்ப்பதும், பின்னர் கோடு போட்டு ரோடு போடுவதும் சவாலாக இருக்கும்.