ச-ரோ-ஜா திரைப்ப

ச-ரோ-ஜா திரைப்படம் பார்த்தேன்

பிடித்தது : நகைச்சுவை
எரிச்சல் :

1. திரையில் வரும் விளக்கக்குறிப்புகளில் 90 சதவிதத்தை ஆங்கிலத்தில் காட்டியது . ஒரிசாவில் உள்ள ஒரு தொழில் நகரம் என்று தமிழில் எழுத்து போட்டால் என்ன குறைச்சல். தமிழ் படம் தானே

2. ஒன்று நகைச்சுவை படம் எடுக்க வேண்டும். அல்லது திகில் படம் எடுக்க வேண்டும். ஒரேயடியாக இரண்டையும் கலந்தது ஒட்ட வில்லை (பஞ்சதந்திரம் நன்றாக இருந்தது சரிதான். ஆனால் இங்கு திரைக்கதை சொதப்பல்)

3. நகைச்சுவைக்கு படம் எடுக்கும் பட்சத்தில் இரண்டாவது பாதி முழுவதும் இருட்டில் எடுத்ததை தவிர்த்திருக்கலாம்.

4. யுவன் பின்னனி இசையில் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது.

5. ஒடும் தொடர்வண்டியில் ஏற வேண்டியவர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் ஏறலாமே. ஏன் நிலையத்திலேயே நிற்கிறார்கள்.நிலையத்தில் வில்லன் நிற்கும் பட்சத்தில் சிறிது தொலைவு சென்று ஏற வேண்டியது தானே

சாராம்சம் : இரண்டாவது முறை பார்த்தால் சிறிது சிரிக்கலாம். நான் இரண்டாவது முறை பார்க்கும் உத்தேசம் இல்லை