கூகிள் குரோம்
கூகிள் குரோம் குறித்த என் முதல் பார்வை
1. தமிழில் போனடிக்கிற்கு ஆப்பு
2. சில தளங்கள் பயங்கர வேகமாக தரவிறங்குகிறது
3. சில தளங்கள் மெதுவாக. அதிலும் முதல் முறை என்றால் மிகவும் மெதுவாக. ஒரு வேளை நச்சு நிரல் குறித்து ஏதாவது சோதனையா என்று தெரியவில்லை
4.பக்கத்தின் ஐ.பி.எண் தெரியும் வரை சக்கரம் கடிகார சுற்றிற்கு எதிராக சுற்றுகிறது. பக்கம் இறங்கும் போது கடிகார சுற்று ![]()
5. நெருப்பு நரியில் எலியை வலது புறம் சொடுக்கி மேலிருந்து இரண்டாவதாக சுட்டினால் – Open in New Tab. இங்கோ அது முதலில். இரண்டாவதில் Open in New Tab. – கொஞ்ச நேரம் தாவு தீர்ந்து விட்டது.
6. அதே போல் tabs முகவரி பட்டைக்கு மேல் இருக்கிறது. இதுவும் கை பழக்கத்திற்கு வர சிறிது நாட்களாகும்
புருனோ 7:55 pm on September 3, 2008 Permalink |
வோர்ட், எக்சல் போன்றவைகளிலிருந்து உலாவிக்கு படியெடுக்கும் போது (அல்லது உலாவியிலிருந்து வோர்ட், எக்சல் போன்றவைகளுக்கு) குரோம் சொதப்புகிறது. நெருப்புநரி இந்த விசயத்தில் மிக குறைந்த அளவே இம்சித்தது !!
ரவி 1:46 am on September 4, 2008 Permalink |
http://microblog.ravidreams.net/google-chrome/