பாரதி, கீழ்சாத
பாரதி, கீழ்சாதி எனக்கூறப்படும் மக்களுக்கு ஏன் பூணூல் அணிவித்தார். தன்னுடைய பூணூலையும் தன் கொள்கை ஒத்த பார்ப்பனர்களின் பூணூலை அறுத்து அல்லவா எறிந்துருக்க வேண்டும்.
பாரதி, கீழ்சாதி எனக்கூறப்படும் மக்களுக்கு ஏன் பூணூல் அணிவித்தார். தன்னுடைய பூணூலையும் தன் கொள்கை ஒத்த பார்ப்பனர்களின் பூணூலை அறுத்து அல்லவா எறிந்துருக்க வேண்டும்.
ரவி 8:21 am on September 15, 2008 Permalink |
நல்ல கேள்வி.
காந்தி எளியவர்களைப் போல உடையணிந்தது, இந்தியாவில் உள்ள எளியவர்களுக்கு எல்லாம் coat, suit வாங்கித் தருவதை விட வலிமையான அணுகுமுறை. எதன் பெயரில் “உயர்வு, உரிமை, தகுதி” என்ற பிம்பங்கள் உருவாக்கப்படுவதோ அதையே மொத்தமாகப் புறக்கணிப்பது தான் சரியாக இருக்கும். மற்ற அணுகுமுறைகள் sanskritisation போல் ஆகலாம்.
திருப்பதி வேங்கடேசரை தலித் தெருக்களுக்கு எடுத்து வரப் போகிறோம் என்று ஒரு செய்தி வந்தது. அதற்குப் பதிலாக தலித்துகளையே கோயிலுக்குள் விட்டால் என்ன என்று தோன்றியது.
புருனோ 1:55 pm on September 15, 2008 Permalink |
ரவி,
நான் ப்ளாககர் உபயோகிக்கிறேன்
நீங்கள் வோட்பிரஸ் உபயோகிக்கிறீர்கள்
நீங்கள் ப்ளாக்கர் உபயோகிப்பது (நீங்கள் என்னைப்போல் ஆவது) உங்களுக்கு வெற்றியா
-
ரவி 2:29 pm on September 15, 2008 Permalink |
புருனோ, blogger தான் வென்றது என்று எழுதிக் கொடுத்திடுறேன். இன்னொரு முறை இந்த உரையாடல்,எடுத்துக்காட்டே வேண்டாம்
**
உன்
கோவணம்
அவிழ்க்கப்பட்டதா?
அவன்
கைகளை
வெட்டு!
கெஞ்சி வாங்கி
கோவணம்
கட்டாதே…
அம்மணமாகவே
போராடு..!
காசி ஆனந்தன்
பிரேம்குமார் 8:43 pm on September 15, 2008 Permalink |
புருனோ,
என்னை போல உங்களை ஆக்குவது எனும்போதே…. ‘நான் உயர்ந்தவன்’ என்ற மனப்பான்மை வந்துவிடுகிறதே
Thats the point
புருனோ 4:02 am on September 16, 2008 Permalink |
//என்னை போல உங்களை ஆக்குவது எனும்போதே…. ‘நான் உயர்ந்தவன்’ என்ற மனப்பான்மை வந்துவிடுகிறதே//
நெத்தியடி – மிக அருமையான உதாரணம் – நன்றாக புரிகிறது. நன்றி
புருனோ 4:09 am on September 16, 2008 Permalink |
பிரேம்குமார்,
உங்களின் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
புருனோ 4:13 am on September 16, 2008 Permalink |
//புருனோ, blogger தான் வென்றது என்று எழுதிக் கொடுத்திடுறேன். இன்னொரு முறை இந்த உரையாடல்,எடுத்துக்காட்டே வேண்டாம் //
ஹி ஹி ஹி
ரவி, நான் வோர்ட்பிரஸின் எதிரி கிடையாடு. custom domain வசதி இலவசமாக வழங்கப்பட்டால் என் பதிவுகளில் பல வோர்ட்பிரஸுக்கு மாறி விடும்
-
periyar critic 10:01 pm on September 17, 2008 Permalink |
‘திருப்பதி வேங்கடேசரை தலித் தெருக்களுக்கு எடுத்து வரப் போகிறோம் என்று ஒரு செய்தி வந்தது. அதற்குப் பதிலாக தலித்துகளையே கோயிலுக்குள் விட்டால் என்ன என்று தோன்றியது.’
இது கோயிலுக்கு நீங்கள் போகாவிட்டாலும் சாமி உங்களைத் தேடி வருகிறார் என்பதற்காக.இந்துமத
விரோதிகளுக்கு இது ஒரு பதிலடி.தலித்களை
இந்து விரோதிகளாக்கி மதமாற்றம் செய்ய துடிக்கும்
மிஷனரி கும்பலுக்கு இது பிடிக்காதுதான்.கோயில் நிர்வாகம்
உற்சவ மூர்த்திகளை இப்படி மக்கள் வாழ்கின்ற பகுதிகளுக்கு
எடுத்துச் செல்வதை வரவேற்க மனதில்லாத ‘பகுத்தறிவு’,
‘முற்போக்கு’கள் உடனே எதையாவது சொல்லி அதை
குறை கூறுவது வாடிக்கையாகிவிட்டது. திருப்பதி
கோயில்களுக்குள் தலித்களை விடுவதில்லை என்று
யார் சொன்னது.லட்சக்கணக்கில் மக்கள் அங்கு வருகிறார்கள்
என்பது தெரியாதா.அங்கு தரிசிக்க வரும்,வசதியற்ற ஏழைகளுக்கு உணவும்,இடமும் இலவசமாக தருகிறார்கள்.
கோயிலுக்கு வரும் நிதியை வைத்து சமூகத்திற்கு, மத பாகுபாடின்றி எவ்வளவோ செய்கிறார்கள். அதி மேதாவிகள் செய்திகளை அரைகுரையுமாக படித்துவிட்டு,ஒரு கருத்து சொல்லுவதை எப்போது நிறுத்துவார்கள்
.
periyar critic 10:05 pm on September 17, 2008 Permalink |
‘பாரதி, கீழ்சாதி எனக்கூறப்படும் மக்களுக்கு ஏன் பூணூல் அணிவித்தார். தன்னுடைய பூணூலையும் தன் கொள்கை ஒத்த பார்ப்பனர்களின் பூணூலை அறுத்து அல்லவா எறிந்துருக்க வேண்டும்.’
ஐயா, பாரதியின் எழுத்துக்களையும்,வாழ்க்கை வரலாற்றையும் படித்து விட்டு இதைக் கேளுங்கள்.
மனிதரில் உயர்வு-தாழ்வு பார்க்கலாகாது என்பது
பாரதியின் கொள்கை.பூனூல் போடுவது என்பது
உனக்கும் எனக்கும் வேறுபாடு இல்லை, இந்து
மதத்தின் உயர்ந்த ஞானமும்,தத்துவமும்,
உனக்கும் உண்டு, எனக்கும் உண்டு, நீயும்
நானும் சமம் என்பதை உணர்த்த.
santhoshguru 10:17 am on September 20, 2008 Permalink |
நான் பாரதியின் அனைத்து எழுத்துக்களையும் படித்தவன் அல்ல. அதைப் படித்துவிட்டு தான் கேள்வி கேட்க வேண்டும் என்று ஒரு சட்டமும் இல்லை.
// நீயும் நானும் சமம் என்பதை உணர்த்த //
அப்படி உணர்த்த அந்த ஒரு முழம் கயிறு தான் தேவையா என்பது தான் என் கேள்வி.
நீயும் நானும் சமம் என்பதை ஒரு கயிறு உணர்த்தும் என்றால், அதில் உள்ள நுண்ணரசியலுக்கு (என்னை போல உங்களை ஆக்குவது எனும்போதே…. ‘நான் உயர்ந்தவன்’ என்ற மனப்பான்மை வந்துவிடுகிறதே) உங்கள் பதில் என்ன.
ரவிசங்கர் 7:38 pm on September 21, 2008 Permalink |
periyar critic, திருப்பதி போன்ற பெரிய கோயில்களுக்குள் எல்லா சமய, சாதியினரும் நுழைய இயலும் என்பதற்கு நடைமுறை காரணமே முக்கியம். எல்லாரிடமும் சாதிச் சான்றிதழ் வாங்கிப் பார்த்து அனுமதிக்க இயலாதே
thatstamil செய்தியில் இருந்து –
//திருமலையைச் சுற்றிலும் உள்ள பல கோவில்களிலும் தலித் மக்கள் நுழைய தடை உள்ளது. இதனால் தலித் மக்கள் தங்களது இஷ்ட தெய்வத்தை வழிபட முடியாத அவலம்.
//
என்றோ ஒரு நாள் தொலைவில் உள்ள சாமி சிலையைக் கொண்டு வந்து காட்டுவதற்குப் பதில், ஒவ்வொரு நாளும் தங்கள் ஊரின் அருகாமையில் உள்ள கோயில்களில் தலித்கள் வழிபட வழி செய்வது அல்லவா சரியாக இருக்கும்?
//இது கோயிலுக்கு நீங்கள் போகாவிட்டாலும் சாமி உங்களைத் தேடி வருகிறார் என்பதற்காக.//
போகாவிட்டாலும் இல்லை. போக விடமாட்டேன் என்கிறார்கள் என்பது தான் பிரச்சினை.
//இந்துமத
விரோதிகளுக்கு இது ஒரு பதிலடி.//
கோயில்களுக்குள் தலித்துகள் நுழைய விடாமல் தடுப்பது இந்துக்கள் தான். பிற சமயத்தினர் அல்ல.
//இந்து
மதத்தின் உயர்ந்த ஞானமும்,தத்துவமும்,
உனக்கும் உண்டு, எனக்கும் உண்டு,//
இதைப் பூணூல் போடாமல் கிடைக்கச் செய்யலாகாதா?
//நீயும்
நானும் சமம் என்பதை உணர்த்த.//
பாரதி தன்னுடைய பூணூலைக் கழட்டி இருந்தாலும் இதே சமத்துவத்தை உணர்த்தி இருக்கலாமே? எல்லா பிராமணர் அல்லா சாதியனருக்கும் பூணூல் அணிவதை விட தன்னுடைய பூணூலைக் கழட்டுவது இலகு அல்லவா?
coat, suit போட்டவர்களைத் தான் ஒரு விடுதிக்குள் விடுகிறார்கள். வேட்டி கட்டியவர்களை விடுவதில்லை என்றால் என்ன செய்யலாம்? வேட்டி கட்டியவர்கள் எல்லாருக்கும் coat, suit வாங்கித் தந்து அவர்களை “உயர்த்த” வேண்டு்மா? இல்லை, அந்த விடுதியில் உறுப்பினர் ஒருவர் சமத்துவத்தை வலியுறுத்த தானும் வேட்டி கட்டி வர வேண்டுமா? வேட்டி கட்டுபவர்கள் அனைவரும் காசில்லாதவர்கள் இல்லை. பண்பாடு, காற்றோட்ட வசதி கருதி விரும்பியும் கட்டியிருக்கலாம்.
சிகப்பு அழகு, கறுப்பு அசிங்கம் என்று ஒரு எண்ணம் இருக்கிறது. கறுப்பர்ளை சம நிலைக்கு கொண்டு வர சிவாசி படத்தில் உள்ளது போல் எல்லாருக்கும் வெள்ளை அடிக்க வேண்டுமா? இல்லை, கறுப்பர்களுடன் வேறுபாடின்றி ஒட்டி உறவாட வேண்டுமா?
என்னைப் போல் உன்னையும் ஆக்குகிறேன் என்பதே முதலில் நான் உயர்ந்தவன் என்ற மனநிலையின் வெளிப்பாடே.