ஒரு குறிப்பிட் …

ஒரு குறிப்பிட்ட ஜாதியுடன் அடையாளப்படுத்தப்பட்டுவிட்டால் அந்த நடிகரால் கண்டிப்பாக “உச்ச” நிலையை அடை முடியாது.

ரஜினிக்கோ கமலுக்கோ 80களில் 90களில் இருந்த ரசிகர்கள் யாருமே அவரது ஜாதியை பார்த்து இருக்க வில்லை. 2000க்கு பிறகு வேறு பல காரணங்களால் அந்த அடையாளம் ஒட்டிக்கொண்டதே தவிர அவர்கள் அதை ஒரு போதும் வெளிப்படுத்தியது கிடையாது.

விஜய், அஜித், விக்ரம், ராமராஜன் !! ஆகியோரின் வெற்றிக்கு ஒரு காரணம் அவர்கள் “ஜாதி நடிகராக” அடையாளப்படுத்தப்படாததால் தான் என்பது என் கருத்து

விஜய் என்ன ஜாதி என்பதும் ராமராஜன் என்ன ஜாதி என்பதும் சரத்குமார் ரசிகர்களில் கூட பலருக்கு தெரியாது.

அதே போல் விக்ரம் என்ன ஜாதி என்பது பல பிரசாந்த் ரசிகர்களுக்கு கூட தெரியாது.

ஷாம், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ் ஆகியோர் அவர்களின் திரைத்துறை பணித் தடத்தின் (career – பணித்தடம்) ஆரம்ப கட்டத்திலேயே ஜாதி நடிகர் என்ற முத்திரையை பெற்று விட்டார்கள். இதுவே அவர்களால் ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் செல்ல தடையானது.

திரைத்துறையிலும் அரசியலிலும் ஜாதி அடையாளம் என்பது இரு பக்கமும் ஏன் இருமுனையும் கூர்மையான கத்தி.

அதை வைத்து கேக்கை வெட்டியவர்களை விட கையை வெட்டிக்கொண்டவர்கள் தான் அடையாளம்.

1998 நாடாளுமன்ற தேர்தலில் திருநெல்வேலியில் சரத்குமார் தோற்ற அதே நேரம் திருச்செந்தூரில் ராமராஜன் வெற்றி. இருவரும் ஒரே ஜாதி என்ற விபரம் எத்தனை பேருக்கு தெரியும்

விஜயகாந்தால் ஏன் தமிழக முதல்வராக முடியாது என்பதற்கு கூட ஒரு காரணம் அவரது ஜாதி (?? மொழி) அடையாளம் தான்.