http://groups.google.com/group/tamil_wik …
http://groups.google.com/group/tamil_wiktionary/web/11-2006
zoom lens – உருப்பெருக்க வில்லை !
சில நாட்களுக்கு lens குறித்து விவாதித்தோமே
http://groups.google.com/group/tamil_wiktionary/web/11-2006
zoom lens – உருப்பெருக்க வில்லை !
சில நாட்களுக்கு lens குறித்து விவாதித்தோமே
ரவி 6:45 am on August 3, 2008 Permalink |
மறந்து போச்சு
அகரமுதலிகளில் உறங்கும் சொற்கள் நினைவுக்கு வருவதில்லை
bruno 7:14 am on August 3, 2008 Permalink |
இது போல் சொற்களை எல்லாம் உடனுக்குடன் விக்சனரியில் சேர்த்து, அது குறித்து நடக்கும் விவாதங்களையும் விக்சனரி பேச்சு பக்கத்தில் சேர்க்க வேண்டும்.
வருங்காலத்தில் விக்சனரி பேச்சு பக்கங்கள் ஒரு ஆவணமாக பயன் படும்.
பல வலைப்பதிவுகள், மின்னரட்டைகள், மின் மடல் குழுமங்கள் என்று பிரிந்து இருப்பதில் எந்த பலனும் கிடையாதே
ரவி 7:40 am on August 3, 2008 Permalink |
விக்சனரி தளத்தில் / விக்கி மென்பொருளில் பங்கு கொண்டு உரையாட மக்களுக்கு சிரமமாக இருந்ததால், மின்மடல் உரையாடல்கள் இலகுவாகத் தோன்றியதால் தான் இந்தக் குழுமமே வந்தது. மிகவும் பொருத்தமான சொற்களை அவ்வப்போது விக்சனரி பக்கங்களில் சேர்க்கிறோம். இன்னும் நிறைய ஆர்வலர்கள் தேவை. எனினும், பரிந்துரைக்கப்படும் எல்லா சொற்களையும் நேரடியாக விக்சனரி பக்கத்தில் சேர்ப்பதும் சரியான அணுகுமுறையாக இருக்காது. கொஞ்சம் புழக்கத்துக்கும் வர வேண்டும். பேச்சுப் பக்கத்தில் இட்டு ஒரு புரிதலுக்கு வந்த பின் விக்சனரி பக்கத்தில் சேர்க்க வேண்டும். நீங்கள் சொல்வது சரி, வருங்காலத்தில் தமிழ் அறிவுப் புலத்துக்கு விக்கி திட்டங்கள் ஒரு முக்கிய களமாக விளங்கும்.
bruno 7:54 am on August 3, 2008 Permalink |
//விக்சனரி தளத்தில் / விக்கி மென்பொருளில் பங்கு கொண்டு உரையாட மக்களுக்கு சிரமமாக இருந்ததால், மின்மடல் உரையாடல்கள் இலகுவாகத் தோன்றியதால் தான் இந்தக் குழுமமே வந்தது.//
நான் இதை மறுக்க வில்லை. நான் நினைப்பது என்னவென்றால் இந்த மின்மடல் குழுமங்கள் மற்றும் வலைபதிவு மறுமொழிகளில் நடக்கும் உரையாடல்களை அவ்வப்போது விக்சனரி பேச்சுப்பக்கத்தில் சேர்த்தால் பிற்காலத்தில் கண்டுபிடிப்பது எளிது
//எனினும், பரிந்துரைக்கப்படும் எல்லா சொற்களையும் நேரடியாக விக்சனரி பக்கத்தில் சேர்ப்பதும் சரியான அணுகுமுறையாக இருக்காது.//
இதில் எனக்கு மாறுபட்ட கருத்து உள்ளது. முதலில் அனைத்து சொற்களையும் சேர்த்து விடுவோம். பிறகு அதைவிட பொருத்தமான சொற்கள் கிடைத்தால் மாற்றி விடலாம்.
ஒரு ஆங்கில சொலிற்கு ஈடான தமிழ் சொல் தேவைப்பட்டால் அதை விக்சனரியில் தேடும் நிலையை உருவாக்க வேண்டும் என்பதே என் எண்ணம்
சில தவறான சொற்கள் சேர்க்கப்படலாம். ஆனால் பல நல்ல சொற்களும் சேருமல்லவா.
bruno 7:59 am on August 3, 2008 Permalink |
உதாரணமா நமது ”வில்லை” எடுத்துக்கொள்ளுங்கள். அதை யாராவது முன்னரே சேர்த்திருந்தால் நமது நேரம் மிச்சம்தானே
”வில்லை” சரியான சொல்லா இல்லையா என்று “ரூம் போட்டு யோசித்துக்கொண்டிருந்தால்” லென்ஸ் என்று ஒரு தமிழ் சொல் வந்து விடும்.
நாம் தற்பொழுது (நம் மொழியின் வளர்ச்சியில்) ஒரு நிலைமாற்ற கட்டத்தில் உள்ளோம். இங்கு நமக்கு புது சொற்கள் தேவை. (Something is better than nothing).
மேலும் மொழி வளர்ந்து ஒரு நிலையான கட்டத்திற்கு வரும் போது (Nothing is better than nonsense) என்ற நிலை வரும்.
அப்பொழுது மெதுவாக தேவையில்லாத சொற்களை நீக்கி விடலாம் என்பது என் கருத்து.
ரவி 8:00 am on August 3, 2008 Permalink |
“அகரமுதலி என்பது புதிதாகச் சொற்களை உருவாக்கித் தருவது அல்ல, ஏற்கனவே புழக்கத்தில் உள்ள சொற்களை ஆவணப்படுத்துவது” என்று எங்கோ படித்த நினைவு. ஆங்கில அகரமுதலிகளில் புதிதாகச் சேர்க்கப்படும் சொற்களும் கடந்த சில ஆண்டுகளில் புழக்கத்தில் உள்ள சொற்களாக இருப்பதைக் காணலாம். ஆனால், தமிழ்ச் சூழலில் சொற்களை உருவாக்கி அகரமுதலியில் இட்ட பிறகு அதைப் பார்த்தே புழக்கத்துக்கு வர வேண்டிய நிலையில்
, சொற்களைச் சேர்ப்பதில் இறுக்கம் காட்டலாகாது. அதே வேளை, ஏற்கனவே புழக்கத்தில் உள்ள சொற்கள், புதிய சொற்கள் என்று சொற்களை உருவாக்குபவர்கள் நிறைய இருக்கிறார்கள். சில நன்றாக உள்ளன. சில பொருத்தமாய் இல்லை. எல்லாவற்றையும் நேரடியாக அகரமுதலியில் சேர்த்தால் ஏதும் அறியாமல் வரும் வாசகருக்கு குழப்பம் வரலாம். எது சரி. எதை எடுப்பது என்று அவரால் முடிவு செய்ய இயலாமல் போகலாம். எல்லா சொற்களையும் சேர்ப்பது – ஒன்றையும் சேர்க்காமல் விடுவது – இவை இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையிலேயே சேர வேண்டி இருக்கிறது.
bruno 8:02 am on August 3, 2008 Permalink |
புதிதாக சேர்ப்பது தமிழ் சொல் (பிற மொழி சொல் அல்ல) என்பதில் மட்டும் உறுதியாக இருக்க வேண்டும். சரியான தமிழ் சொல்லா, அதை விட பொருத்தமான வேறு சொற்கள் உள்ளனவா என்று மெதுவாக பார்த்துக்கொள்ளலாம் என்பது என் கருத்து.
சரியான தமிழ் சொல்லை தேடிக்கொண்டிருக்கும் வேலையில், பிற மொழி சொற்களின் பயன் பாடு அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பது என் கருத்து.
bruno 8:07 am on August 3, 2008 Permalink |
//“அகரமுதலி என்பது புதிதாகச் சொற்களை உருவாக்கித் தருவது அல்ல, ஏற்கனவே புழக்கத்தில் உள்ள சொற்களை ஆவணப்படுத்துவது” என்று எங்கோ படித்த நினைவு.//
நான் ஏற்றுக்கொள்கிறேன். நான் கூறுவது வீக்கியின் கொள்கைக்கு எதிராக கூட இருக்கலாம். ஆனால் நாம் பேசி முடிவு செய்ய வேறு தளம் தற்சமயம் இல்லை என்பதையுன் நினைவில் வைக்க வேண்டுமே
bruno 8:15 am on August 3, 2008 Permalink |
//ஆனால், தமிழ்ச் சூழலில் சொற்களை உருவாக்கி அகரமுதலியில் இட்ட பிறகு அதைப் பார்த்தே புழக்கத்துக்கு வர வேண்டிய நிலையில்
, சொற்களைச் சேர்ப்பதில் இறுக்கம் காட்டலாகாது//
இதைத்தான் நான் கூறுகிறேன்.
உதாரணமாக நான் பதிவெழுதுகையில் எனக்கு ஒரு ஆங்கில சொல்லுக்கு (confidential) ஈடான தமிழ் சொல்வேண்டுமென்றால் நான் http://ta.wiktionary.org/wiki/confidential பக்கத்தில் பார்க்கிறேன். கமுக்கமான; நம்பகமான; மறைகாப்பு மந்தணம் என்ற அழகான தமிழ் சொற்கள் கிடைக்கின்றன.
ஆனால் நான் Cheer Girlsக்கு என்ன சொல் என்று பார்க்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
அந்த பக்கத்தில் “உற்சாக மங்கையர்” என்று இருந்தால் நான் என்ன செய்வேன்
1. அந்த சொல்லை பயன் படுத்துவேன்
அல்லது
2. ஊக்கம் ஊட்டும் ஆடும் நங்கையர் அல்லவா, ஆகவே அவர்களை ஊக்கியர், ஊக்க நங்கையர், ஊக்க ஆடலர்,
ஊக்க ஆடலழகிகள் (ஊக்காட்ட அழகிகள்) என்று விவாதத்தை ஆரம்பிப்பேன்
அதே நேரம்
Cheer Girlsக்கு ஒரு தமிழ் சொல்லும் இல்லையென்றால்
1. நான் சியர் கேர்ள்ஸ் என்று எழுதுவேன் (100 பேர்களில் எத்தனை பேர் இதை செய்வார்கள் என்று நீங்களே முடிவு செய்யலாம்)
2. அதற்கு தமிழ் வார்த்தை கண்டுபிடிப்பேன் (100 பேர்களில் எத்தனை பேர் இதை செய்வார்கள் என்று நீங்களே முடிவு செய்யலாம்)
நீண்டகால நோக்கில் எது நன்மை அளிக்கும் என்று நினைக்கிறீர்கள்
bruno 8:22 am on August 3, 2008 Permalink |
cheer girlsக்கு ஒரு பதம் இல்லையென்றால் அந்த பதம் உருவாக்கப்படாமலேயே போக வாய்ப்பு அதிகம்.
“அகரமுதலி என்பது புதிதாகச் சொற்களை உருவாக்கித் தருவது அல்ல, ஏற்கனவே புழக்கத்தில் உள்ள சொற்களை ஆவணப்படுத்துவது” என்று வைத்துக்கொண்டாலும் நமக்கு நான் குறிப்பிடபடி இயங்க ஒரு தளம் கட்டாயம் தேவைப்படுகிறது.
ரவி 8:29 am on August 3, 2008 Permalink |
புருனோ உங்கள் கருத்துகளை ஏற்றுக் கொள்கிறேன். தமிழ்ச் சூழலைக் கருதி புதிய சொற்களை நேரடியாக விக்சனரியில் உள்ளிட வேண்டிய தேவை இருக்கவே செய்கிறது
bruno 8:35 am on August 3, 2008 Permalink |
“ஏற்கனவே புழக்கத்தில் உள்ள சொற்களை ” என்று எடுத்துக்கொண்டால் தற்பொழுது தமிழ் விக்சனரியில் இருக்கும் 90 சதவித சொற்களை அங்கிருந்து எடுக்க வேண்டிவரும்
மறைகாப்பு என்ற சொல்லை விட இரகசிய காப்பு என்ற சொல்தானே அனைவருக்கும் தெரியும்
மந்தணம் என்ற சொல் (அரசு பணியில், அதுவும் நிர்வாக பணியில் இருப்பவர்களை தவிர்த்து) எத்தனை பேர்களுக்கு தெரியும்