நான் பல சுகாதா

நான் பல சுகாதார துறையிலும், மருத்துவத்துறையிலும் சென்னை முதல் குக்கிராமம் வரை வேலை பார்த்திருக்கிறேன். தமிழர்கள் இன்னமும் “கூட்டுத்தொழிலுக்கு” மனப்பக்குவம் அடையவில்லை

அதாவது இருவர் ”சமமாக” (team work) இருந்து வேலை செய்ய பழக வில்லை. யாராவது ஒருவர் மேலாகவும், ஒருவர் கீழாகவும் இருந்தால்தான் (hierarchy) வேலை ஜோராக நடக்கும்.

மருத்துவமனை துப்புரவு தொழிலாளியிலிருந்து அரசு செயலர் வரை இதே மனநிலை தான்.

ஒரு வழக்கை துப்பறிய சிறிது வாகனங்கள் பற்றிய அறிவும், சிறிது அந்த பகுதியை பற்றிய அறிவும் தேவை என்றால், இரு நபர்கள் தேவை. காவல் துறையில் இரு ஆய்வாளர்களோ, இரு துனைஆய்வாளர்களோ சேர்ந்தால் ஒன்றுமே நடக்காது. பிரச்சனையை தவிர. ஒரு ஆய்வாளரும் ஒரு துனை ஆய்வாளரும் சேர்ந்த அணிதான் வேலை செய்கிறது

இதற்கு காரணம் “இன்று நீ சொல்வதை (எனக்கு தெரியாததை) நான் கேட்கிறேன்; நாளை நான் சொல்வதை (உனக்கு தெரியாததை) நீ கேள்” என்பது தமிழர்களிடம் வெகு அரிதாக காணப்படும் குணம்.

இது தான் வலையிலும், இணையத்திலும் பிரதிபலிக்கிறது