… கண்டவுடன் …
முதல் பார்வையிலேயே சொக்கிப்போனேன். அவள் அணிந்திருந்த அந்த சிகப்பு நிற புடவையும், அதற்கு ஏற்றார்போல் பொட்டும், வளையலும் அவளை மேலும் அழகாக்கின. காலணியின் நிறம் தெரியவில்லை – அதுவும் சிகப்பாக இருக்குமோ? தி்ருத்தமான அவள் முகமே சொன்னது, இவ்வளவு நாளாக நான் தேடியவள் - என்னவள் - இவள்தான். மெல்ல புன்னகைத்தேன். அதற்குள் சிகப்பு பச்சை ஆனது. அவள் பேருந்து கிளம்பிவிட்டது. எவ்வளவு முயன்றும் என் சைக்கிளைக்கொண்டு அந்த பேருந்தை பிடிக்க முடியவில்லை.
ரவி 9:55 am on July 16, 2008 Permalink |
//காலணியின் நிறம் தெரியவில்லை – அதுவும் சிகப்பாக இருக்குமோ?//