அடையாளமிலி வலைப்பதிவர்கள்
அடையாளம் காட்டாத, மறுமொழிப் பெட்டியை மூடி வைத்துவிட்டு எழுதும் வலைப்பதிவர்கள் பற்றி நினைத்துப் பார்க்கிறேன். கூடுதல் சுதந்திரமாக உணர்வார்களோ?
அடையாளம் காட்டாத, மறுமொழிப் பெட்டியை மூடி வைத்துவிட்டு எழுதும் வலைப்பதிவர்கள் பற்றி நினைத்துப் பார்க்கிறேன். கூடுதல் சுதந்திரமாக உணர்வார்களோ?
புருனோ 6:38 am on August 5, 2008 Permalink |
அடையாளம் காட்டது வேறு – இதில் பல சிக்கல்கள் இருக்கலாம். உதாரணம் – அலுவலக கட்டுப்பாடு. ஊடகத்துறையில் இருக்கும் பல பதிவர்கள் தங்களின் நிர்வாகத்திற்கு பயந்தே அடையாளம் காட்டாமல் எழுதுகிறார்கள்
புருனோ 6:41 am on August 5, 2008 Permalink |
ஆனால் மறுமொழியை மூடிவைப்பது என்பது அவர்கள் எழுதும் கருத்து மேல் அவர்களுக்கே நம்பிக்கையில்லை என்பதை காட்டுகிறது
ரவி 7:58 am on August 5, 2008 Permalink |
புருனோ, மறுமொழியைப் பெட்டியை மூடுவதும் அடையாளம் காட்டாததும் அவரவர் விருப்பம். அடையாளமிலிகளைக் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால், நல்லா எழுதுறவங்க தங்க படம் எல்லாம் பெரிசா போட்டு தங்களை பெரிய எழுத்தாளர்களா நிறுவ முயலுகையில், அவர்களின் உந்துதல் என்னவாக இருக்கும் என்று யோசிக்கிறேன்.
தன்னுடைய உணர்வுகள், கருத்துகளை ஒரு இடத்தில் பதிந்து வைத்தால் போதுமே? வருகிற மறுமொழிகளை ஒழுங்குபடுத்தி ஒரே இடத்தில் பதில் அளிப்பது நேரம் எடுக்கும் வேலை. பொறுமை, நேரம் இல்லாதவர்கள் பெட்டியை மூடுவதில் தவறில்லை.
ஆங்கில வலைப்பதிவுகளில் இடுகை ஒரு பக்கம் friendfeed, disqus என்று மறுமொழிகள் இன்னொரு பக்கம் என்றும் சிதறி வருகின்றன. இடுகையைத் துவங்குபவர் ஒரு விவாதப் பொருளுக்கான முதல் அடியை வைக்கிறார். அடுத்தடுத்த விவாதங்களும் அவரது முன்னிலை, ஒப்புதலுடனே நடக்க வேண்டும் என்றில்லை. வலுவான இன்னொரு விவாதக் களம் இருந்தால், அவரே அங்கு வருகை தந்து பதிலளிக்க வேண்டிய நிலையும் வரும்.
நிகழ் வாழ்க்கையிலும் கூட எல்லா படைப்புகளையும் படைப்பாளி முன்னேவா விமர்சிக்கிறோம்? படம் பார்த்து விட்டு வீட்டில், தெருவில், கல்லூரியில் தானே விமர்சிக்கிறோம். nature is distributed by design
திருவள்ளுவர் மறுமொழிப் பெட்டியைத் திறந்து வைத 8:04 am on August 5, 2008 Permalink |
[...] தொடர்புடைய இடுகை: அடையாளமிலி வலைப்பதிவர்கள் [...]